சனி, 1 ஜனவரி, 2022

2022 வந்தாச்சு, என்ன தான் நடக்குமோ?

வெறும் புத்தாண்டு வாழ்த்துகள், வேலைக்கு ஆகாதாம். சிறப்பாக ஏதும் வழங்கி வாழ்த்துங்கோ!2022  வந்தால் பரவாயில்லை. வாசிப்புப் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வோம். வாசிப்பதால் அறிவைப் பெருக்கி, அறிவாலாயே உலகை ஆளலாம் என்கிறாங்க.


உலகெங்கும் வாழும் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இணையத்தில் மூழ்கினால் மீளவும் முடியுமா?

இணையத்தில்  பல விளையாட்டுகள் இருக்கலாம். ஒருவரைப் பற்றிப் புகழும் தகவலை வெளிப்படுத்தும் விளையாட்டும் இருக்காம். அதன் மாதிரியைக் கீழே பார்க்கவும்.  இவற்றைப் பரப்பினாலும் எவரும் நம்புவதற்கு இல்லை.


2020 பங்குனிக்குப் பின் அதிகமானோர் இணையத்தைப் பாவிக்கத் தொடங்கி உள்ளனர். இணையத்தைப் பாவிக்கத் தொடங்கிய பின் வெளியே வராமல் பலர் மூழ்கிப் போயுள்ளனர். அவர்களை மீட்டு எடுக்கப் போராட வேண்டி இருக்கிறதே!


இணையத்தைப் பாவிக்கத் தொடங்கியதால்  அகவை வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாமல் பலர் காதலில் சிக்கி ஏமாறி உள்ளனர். சிலர் காதலிப்பதாகக் கூறிப் பலரை ஏமாற்றிப் பிழைப்பும் நடாத்துகின்றனர். இப்ப இதெல்லாம் இணையத்தில் இயல்பாகிவிட்டது (வழக்கமாகிவிட்டது).


இவ்வாறான காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) ஊடாகப் பல உண்மைகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. நம்மாளுங்க தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

 வணக்கம் வலையுறவுகளே!  மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.