வெள்ளி, 29 ஏப்ரல், 2022

மூக்கு, வாய் மறைக்க முகக்கவசம்

காதலி: தீநுண்மி (கொரோனா) போனாலும் கூட, முகக்கவசத்தை விடமாட்டியளே!

காதலன்: உன்னைத் தவிரப் பிறர் என்னை அடையாளம் காணாமல் இருக்கத் தான்.

காதலி: என் மீது அவ்வளவு காதலா? எனக்கு இப்ப தானே தெரிந்தது.

காதலன்: இப்பவாவது தெரிஞ்சுதே! தெருப் புழுதி, ஊர்திகளின் புகை போன்ற நச்சுக் காற்றைச் சுவாசிக்காமல் இருக்க முகக்கவசம் தேவையே!



வெள்ளி, 15 ஏப்ரல், 2022

இலங்கையில் பஞ்சம், பட்டினி வருமா? மீம்ஸ்

 எமது அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.


கணக்கின்றிக் காசு அச்சடித்துப் போட்டினமாம்;  அச்சடித்த காசுக்குப் பெறுமதி இல்லாமல் போச்சுதாம். 'இலங்கையருக்குப்  பஞ்சம், பட்டினி வருமா?' என்ற கேள்வியுடன் மக்களிருக்க; தலைவர்கள் நாற்காலி துடைக்கிற பணியில் இருக்கினமாம்.

பஞ்சம், பட்டினி வந்திடுமோ என்ற அச்சத்தில் இலங்கையர் காலி முகத்திடலில் குவிந்த வண்ணம் உள்ளனராம்.

இலங்கையில்  பஞ்சம், பட்டினி வருமாலிருக்க, இலங்கையில் மாற்றம் மலர இறைவனை வேண்டுவோம். 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

வீதி விபத்துகளைத் தடுக்க முயல்வோம் - மீம்ஸ்


ஓட்டுநர்களே! உயிரின் பெறுமதி உணர்ந்து உங்கள் ஊர்திகளை ஒழுங்காக ஓட்டுங்கள். விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.


 ஊர்திகளை ஓட்டும் போது வீதி ஒழுங்கு விதிகளைப் பாருங்க...   விபத்துகளால் வரும் உயிரிழப்புகளைத் தடுக்கலாமே!

காதலர் விழிப்பாக இருக்கிறாங்க - மீம்ஸ்

இந்தக் காலத்துக் காதலர் கொஞ்சம் விழிப்பாக இருக்கிறாங்க...

அழகில (காமத்தில) மயங்கிக் காதலில விழ மாட்டாங்க போல...



திருமணமானால் தான் மலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைவு பற்றிக் கதைப்பாங்க (எனக்குப் பிள்ளைகள் பிறக்காமையால் கதைத்தாங்க...) இப்ப காதலிக்க முன்னரே ஆண்மை இருக்கா, பெண்மை இருக்கா என்று கவனிக்கிறாங்களே... ஓ! அதெல்லாம் காதலர் படிச்சிட்டாங்களோ!


இந்தக் காதல் இணையர்கள், தாம் இலங்கைக்குச் சுற்றுலா போகக் கூடாதென்றும் படிச்சிட்டாங்களோ!


வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

 வணக்கம் வலையுறவுகளே!  மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.