ஞாயிறு, 15 மே, 2022
திறன்பேசியும் பண்பாடும்
ஆச்சி: எல்லாரும் ஏனடி கையைத் தூக்கிப் பிடிக்கிறாங்க பொம்பிழை, மாப்பிழையைப் பார்க்க முடியலையே
பூச்சி: திறன்பேசியைப் பிடித்துப் படம் எடுக்கிறாங்களண
ஆச்சி: படப்பிடிப்புக்காரரை ஏனடி வரச் சொன்னவங்க
பூச்சி: இதெல்லாம் இப்பத்தையப் பண்பாடண
வெள்ளி, 29 ஏப்ரல், 2022
மூக்கு, வாய் மறைக்க முகக்கவசம்
காதலி: தீநுண்மி (கொரோனா) போனாலும் கூட, முகக்கவசத்தை விடமாட்டியளே!
காதலன்: உன்னைத் தவிரப் பிறர் என்னை அடையாளம் காணாமல் இருக்கத் தான்.
காதலி: என் மீது அவ்வளவு காதலா? எனக்கு இப்ப தானே தெரிந்தது.
காதலன்: இப்பவாவது தெரிஞ்சுதே! தெருப் புழுதி, ஊர்திகளின் புகை போன்ற நச்சுக் காற்றைச் சுவாசிக்காமல் இருக்க முகக்கவசம் தேவையே!
வெள்ளி, 15 ஏப்ரல், 2022
இலங்கையில் பஞ்சம், பட்டினி வருமா? மீம்ஸ்
எமது அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
வீதி விபத்துகளைத் தடுக்க முயல்வோம் - மீம்ஸ்
ஓட்டுநர்களே! உயிரின் பெறுமதி உணர்ந்து உங்கள் ஊர்திகளை ஒழுங்காக ஓட்டுங்கள். விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஊர்திகளை ஓட்டும் போது வீதி ஒழுங்கு விதிகளைப் பாருங்க... விபத்துகளால் வரும் உயிரிழப்புகளைத் தடுக்கலாமே!
காதலர் விழிப்பாக இருக்கிறாங்க - மீம்ஸ்
இந்தக் காலத்துக் காதலர் கொஞ்சம் விழிப்பாக இருக்கிறாங்க...
அழகில (காமத்தில) மயங்கிக் காதலில விழ மாட்டாங்க போல...
திருமணமானால் தான் மலட்டுத் தன்மை, ஆண்மைக் குறைவு பற்றிக் கதைப்பாங்க (எனக்குப் பிள்ளைகள் பிறக்காமையால் கதைத்தாங்க...) இப்ப காதலிக்க முன்னரே ஆண்மை இருக்கா, பெண்மை இருக்கா என்று கவனிக்கிறாங்களே... ஓ! அதெல்லாம் காதலர் படிச்சிட்டாங்களோ!
இந்தக் காதல் இணையர்கள், தாம் இலங்கைக்குச் சுற்றுலா போகக் கூடாதென்றும் படிச்சிட்டாங்களோ!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
நாங்களும் நகைச்சுவை எழுதலாமா? என்று தயங்க வேண்டாம். ஓர் உண்மையைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ எழுதிப் பாருங்க. பின் அதனை மீள மீள வாச...
-
'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) என்றால் என்ன?' என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஏனென்றால், 'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' எ...
-
2020 இல புத்தாண்டுப் பலன் சண் ரீவில சொல்லியும் நடக்கேல்ல... தீநுண்மி (கொரோனா) வந்து தடுத்திட்டுது, 2021 இல ஒமிக்கிரான் வந்து நிற்கிறது, 20...