புதன், 22 டிசம்பர், 2021

இணையம் வந்ந பிறகு எத்தனை மாற்றங்கள்

 வலையொளியைப் (யூரியூப்பைப்) பார்த்து மனைவியின் மகப்பேற்றைக் கண்காணித்த கணவரைக் காவற்றுறை பிடித்துச் சிறையில் அடைத்ததாம்.

 வலையொளியைப் (யூரியூப்பைப்) பார்த்துப் பள்ளிக்கூட மாணவியின் வயிறு பெருத்தது. கருக்கலைப்புச் செய்த மருத்துவமனைக்கு மூடுவிழா(சீல் வைப்பு).

இவ்வாறு பரவும் செய்திகளுக்குப் பின்னே, 'இணையம் வந்ந பிறகு எத்தனை மாற்றங்கள்' என்று பேசப்படுகிறது. இணையம் வழி பரவும் கேடு விளைவிப்பனவற்றை இணையத்தில் இருந்து அகற்ற அறிஞர்கள் முயலவேண்டும்.


எல்லாவற்றுக்கும் வேண்டிய மதியுரை இணையத்தில இருக்கென்று நேரடியாக ஒரு மதியுரைஞரை (ஆலோசகரை) நாடாமல் தன்னிச்சையாக முடிவேடுப்பது  பயனற்றது. மேலுள்ள காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) பற்றியும் சிந்திப்போம். நம்ம சூழலில் நாலு ஆள்களைக் கேட்டறிந்து நல்வழி செல்வதே பயன்தரும்.


சின்னஞ் சிறிசுகள் காதல், திருமணம் என்பவற்றைச் சிந்திக்க முன், நாளைக்கு எப்படித் தின்று குடிப்பது பற்றிச் சிந்தித்தால் தெருவில பிச்சை எடுக்காமல் வாழ முயலலாம். அதனை உணர்த்தவே மேலுள்ள காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) விளக்குவதாக நம்புகிறேன்.

சொல்ல வந்ததை ஆவது துணிவாய்ச் சொல்லுங்கோவேன்.

நம்ம சூழலில் நாங்க படிக்க நிறைய இருக்கு, கொஞ்சம் படித்தால் முன்னேற இடமுண்டு. வாங்க கொஞ்சம் கொஞ்சமாய் படிக்கலாம்.

முகத்தார்: இந்தப் பதின்ம அகவைக் கோளாறில, உந்தப் பொடிபெட்டையள் கதைச்சுத் திரிஞ்சுபோட்டு ஆளுக்காள் வேற தோணியில ஏறுதுகள் கண்டியளோ...

முகத்தார்: காதல் மயக்கத்தில அவரவர் கதைக்கேக்க தங்கட வீட்டு நிலைமைகளை உளறிப்போடுவினம். திருமணம் என்றதும் ஊர்திகள் (கார், மோட்டா் சைக்கிள்), மாடி வீடு, கோடி உரூபா கிடைக்கிற தோணியில ஏறினம் போல.....


காதலி: கேட்பதெல்லாம் தருவதாக விருப்பு ஏற்றிப்போட்டு, எப்ப தாலி கட்டுவாய் என்றதும் கொடுப்பனவு (சீதனம், ஆதனம், பொன், பொருள், பணம்) தாவென்று வெறுப்பு ஏற்றுகிறியே!

காதலன்: வீட்டில...   அம்மா... தான்...

காதலி: அதென்ன அம்மா என்றிழுக்கிறியள்.....  சொல்ல வந்ததை ஆவது துணிவாய்ச் சொல்லுங்கோவேன்.

காதலன்: நாலு பெட்டைக் குட்டியள் இருக்கு, ஒரு பெட்டைக் கொடுப்பனவை வேண்டித் தந்திட்டு யாரையும் கட்டென்று தான் அம்மா விடாப்பிடியாக இருக்கிறா!ராமு: எரிபொருளெல்லாம் இரவிரவாய் விலையேற்றும் வேலையைச் செய்கிறாங்க. விடிய விடிய வேலைக்குப் போறவைக்குத் தான் திண்டாட்டம்.

சோமு: உதுக்குத் தான் எரிபொருளைப் பாவிக்காத ஊர்திகளில வேலைக்குப் போகச் சொல்கிறேன். அதுக்குத் தான் இறக்கை கட்டிப் பறக்கலாம் என்றெண்ணுகிறேன்.

வியாழன், 16 டிசம்பர், 2021

புத்தாண்டு எப்பவாம் பிறக்கிறது - நாய்களும் கேட்கிறது

 

2020 இல புத்தாண்டுப் பலன் சண் ரீவில சொல்லியும் நடக்கேல்ல... தீநுண்மி (கொரோனா) வந்து தடுத்திட்டுது, 2021 இல ஒமிக்கிரான் வந்து நிற்கிறது, 2022 இல யானிமோயுநி என்றேதும் வந்து எனது வெள்ளி திசையில அள்ளிக்கொடுக்காமல் பண்ணுமோ?

குயிலு: என்னடா மயிலு! உங்க வீட்டு நாயோட ஊடகவியலாளர் சந்திப்பு நடந்ததாம். உங்க வீட்டு நாய் என்ன பேசிச்சு?

மயிலு: அடியே குயிலு! நம்ம காதல் கதையைச் சொல்லிச்சு! களவாக நாங்க எத்தனை தடவை பின்வீட்டு வேலிக்க கதைத்தோம் என்று சொல்லிச்சு! 

குயிலு: கருங்கண்ணிக் கருவாடு தின்னப் போட்டிட்டு, நாங்க கதைத்ததையும் நன்றியை மறந்து சொல்லிட்டுதே!

மயிலு: நம்ம நாய் நன்றி மறக்காது. விரைவாய்த் தாலி கட்டினால், பத்து மாதத்தில இந்தக் கருவாட்டை உனக்குக் கரையல் வைத்துத் தருவினம் என்று நினைத்து சொல்லியிருக்கும்.

குடிப்போரும் சாவோரும் மலிஞ்சு போச்சு!

 'அடேய்! யாழ்பாவாணா! மீம்ஸ் போட்டுத் தற்கொலை செய்யப் போறவையைத் தடுக்கேலாது. அவர்களது சிக்கலுக்குத் தீர்வு வழங்கினால் தற்கொலை செய்யப் போறவையைத் தடுக்கலாம்' என்போர் நம்மைச் சூழ நிறையவே உள்ளனர்.


மூக்குமுட்டக் குடிப்பதற்கே மூன்று கிலோ மீற்றர் மூவுருளியில் சுத்துறாங்களே!

அரசு குடியை ஊக்குவிக்கையில், மூவுருளியில் குடிப்போரை எப்படித் தடுப்பினம்?

சிறுவர் நிலை, கவலைக்கிடமாம் கண்டியளோ?

"திறன்பேசி வந்தென்ன பயன்? நம்ம காசெல்லோ கரையுது!"

"திறன்பேசி வந்தெல்லோ, நம்ப ஊருப் பொடி, பெட்டையள் கெட்டுப்போச்சு! நான் தேர்தலில் வென்றால், திறன்பேசிப் பாவனையை நிறுத்துவேனே!"

'பெற்றோர் தொலைக்காட்சித் தொடரில் மூழ்க, பிள்ளைகளின்ர படிப்பைக் கவனிப்பது யார்?'

'ஆசிரியப் பெரியோர் வருவாயில் மூழ்க, பிள்ளைகளின்ர படிப்பைக் கவனிப்பது யார்?'

'பிள்ளைகளுக்கோ கொண்டாட்டம், நாட்டிற்கோ எழுத்தறிவு வீதம் குறைவு'

'யார் யாரைக் கவனிப்பது என்றறியாது திண்டாட்டம் தான்!'

செவ்வாய், 7 டிசம்பர், 2021

எழுத்தும் உணர்வு வெளிப்படுத்தும் படமும்

'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) என்றால் என்ன?' என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஏனென்றால்,  'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' என்பது ஒரு மின் ஊடக இலக்கியப் படைப்பாகவும் பேசப்படுகிறது.

எழுத்தும் (கருத்தும்) உணர்வு வெளிப்படுத்தும் படமும் இணைந்த கருத்துப் பட வெளியீடு என்று தான்  'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' என்பதனைச் சொல்ல முடியும். மாற்றாரை நோகடிக்காமல் (தாக்காமல்) நல்ல செய்தியைப் பகிரச் சிறந்த ஊடகம் எனலாம். அதாவது, நகைச்சுவையாக (கேலியும் கிண்டலுமாக) நல்ல அறிவைச் சுருங்கச் சொல்லிப் பகிரலாம். 

சிலரைப் பற்றிய கமுக்கத் தகவல் (கிசுகிசு), சில பொய்த் தகவல் (வதந்தி) போன்றனவும் இவ்வாறு பகிரலாம்.. நேரடியாக இதன் மூலம் பாதிக்கப்பட்டவர், இதனைத் தயாரித்தவருக்கு (Memes Creator) எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதனை (மீம்ஸ்) நல்லறிவை, நல்லெண்ணங்களைப் பகிரப் பாவித்துப் பயன்பெறலாம்.

எடுத்துக்காட்டாக ஒன்றைத் தயாரிக்க முயல்வோம். பொருள், பண்டம், எண்ணெய், தண்ணீர் என எல்லாம் நாட்டில விலையேறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், எவரது உழைப்புக்கான வருவாயும் அதிகரிக்காமையால் மக்கள் துன்பப்படுவதைக் காணமுடிகிறது. இதனை வெளிப்படுத்த வடிவேலு ஆச்சரியப்படும் படத்தில் முயன்றுள்ளேன்.

எடுத்துக்காட்டாக வேறொன்றைத் தயாரிக்க முயல்வோம். வடிவேலு தலையில கைவைக்கிற அளவுக்கு என்னதான் குடிமுழுகிப் போச்சு? அந்தப் படத்தை வைச்சு, உழைச்சு வருவாயை மனைவிக்கு வழங்காவிட்டால், வரும் கேட்டை வெளிப்படுத்த  முயன்றுள்ளேன். 

இவ்வாறு படத்திற்கு ஏற்ற கருத்து அல்லது கருத்துக்கு ஏற்ற படம் பொறுக்கி நீங்களும் 'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' தயாரிக்கக் பழகலாம். நகைச்சுவையாக நல்ல தகவலைப் பகிரக்  'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' சிறந்த ஊடகமாகும். ஒரு படைப்புக்கு (மீம்ஸ்) 5000 - 25000 உரூபா வரை வேண்ட முயலலாம். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

 வணக்கம் வலையுறவுகளே!  மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.