வியாழன், 16 டிசம்பர், 2021

புத்தாண்டு எப்பவாம் பிறக்கிறது - நாய்களும் கேட்கிறது

 

2020 இல புத்தாண்டுப் பலன் சண் ரீவில சொல்லியும் நடக்கேல்ல... தீநுண்மி (கொரோனா) வந்து தடுத்திட்டுது, 2021 இல ஒமிக்கிரான் வந்து நிற்கிறது, 2022 இல யானிமோயுநி என்றேதும் வந்து எனது வெள்ளி திசையில அள்ளிக்கொடுக்காமல் பண்ணுமோ?

குயிலு: என்னடா மயிலு! உங்க வீட்டு நாயோட ஊடகவியலாளர் சந்திப்பு நடந்ததாம். உங்க வீட்டு நாய் என்ன பேசிச்சு?

மயிலு: அடியே குயிலு! நம்ம காதல் கதையைச் சொல்லிச்சு! களவாக நாங்க எத்தனை தடவை பின்வீட்டு வேலிக்க கதைத்தோம் என்று சொல்லிச்சு! 

குயிலு: கருங்கண்ணிக் கருவாடு தின்னப் போட்டிட்டு, நாங்க கதைத்ததையும் நன்றியை மறந்து சொல்லிட்டுதே!

மயிலு: நம்ம நாய் நன்றி மறக்காது. விரைவாய்த் தாலி கட்டினால், பத்து மாதத்தில இந்தக் கருவாட்டை உனக்குக் கரையல் வைத்துத் தருவினம் என்று நினைத்து சொல்லியிருக்கும்.

2 கருத்துகள்:

கிழவரை இளைஞராக்க முடியுமா கண்ணு

 சின்னப் பெண்ணுகளே! கிழவரை இளைஞராக்க முடியாது பாருங்கோ... சின்னப் பெண்ணுகளே! கிழடுகளைக் காதலிப்பதோ திருமணம் செய்வதோ மகிழ்ச்சி தராது  பாருங்க...