ஞாயிறு, 15 மே, 2022
வெள்ளி, 15 ஏப்ரல், 2022
இலங்கையில் பஞ்சம், பட்டினி வருமா? மீம்ஸ்
எமது அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
வீதி விபத்துகளைத் தடுக்க முயல்வோம் - மீம்ஸ்
ஊர்திகளை ஓட்டும் போது வீதி ஒழுங்கு விதிகளைப் பாருங்க... விபத்துகளால் வரும் உயிரிழப்புகளைத் தடுக்கலாமே!
காதலர் விழிப்பாக இருக்கிறாங்க - மீம்ஸ்
இந்தக் காலத்துக் காதலர் கொஞ்சம் விழிப்பாக இருக்கிறாங்க...
அழகில (காமத்தில) மயங்கிக் காதலில விழ மாட்டாங்க போல...
சனி, 5 மார்ச், 2022
சனி, 26 பிப்ரவரி, 2022
செய்திகளில் காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)
அடிக்கடி பரவும் செய்தி இவை தான்!
சனி, 1 ஜனவரி, 2022
2022 வந்தாச்சு, என்ன தான் நடக்குமோ?
வெறும் புத்தாண்டு வாழ்த்துகள், வேலைக்கு ஆகாதாம். சிறப்பாக ஏதும் வழங்கி வாழ்த்துங்கோ!
உலகெங்கும் வாழும் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
வியாழன், 16 டிசம்பர், 2021
குடிப்போரும் சாவோரும் மலிஞ்சு போச்சு!
'அடேய்! யாழ்பாவாணா! மீம்ஸ் போட்டுத் தற்கொலை செய்யப் போறவையைத் தடுக்கேலாது. அவர்களது சிக்கலுக்குத் தீர்வு வழங்கினால் தற்கொலை செய்யப் போறவையைத் தடுக்கலாம்' என்போர் நம்மைச் சூழ நிறையவே உள்ளனர்.
மூக்குமுட்டக் குடிப்பதற்கே மூன்று கிலோ மீற்றர் மூவுருளியில் சுத்துறாங்களே!
அரசு குடியை ஊக்குவிக்கையில், மூவுருளியில் குடிப்போரை எப்படித் தடுப்பினம்?
செவ்வாய், 7 டிசம்பர், 2021
எழுத்தும் உணர்வு வெளிப்படுத்தும் படமும்
'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) என்றால் என்ன?' என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஏனென்றால், 'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' என்பது ஒரு மின் ஊடக இலக்கியப் படைப்பாகவும் பேசப்படுகிறது.
எழுத்தும் (கருத்தும்) உணர்வு வெளிப்படுத்தும் படமும் இணைந்த கருத்துப் பட வெளியீடு என்று தான் 'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' என்பதனைச் சொல்ல முடியும். மாற்றாரை நோகடிக்காமல் (தாக்காமல்) நல்ல செய்தியைப் பகிரச் சிறந்த ஊடகம் எனலாம். அதாவது, நகைச்சுவையாக (கேலியும் கிண்டலுமாக) நல்ல அறிவைச் சுருங்கச் சொல்லிப் பகிரலாம்.
சிலரைப் பற்றிய கமுக்கத் தகவல் (கிசுகிசு), சில பொய்த் தகவல் (வதந்தி) போன்றனவும் இவ்வாறு பகிரலாம்.. நேரடியாக இதன் மூலம் பாதிக்கப்பட்டவர், இதனைத் தயாரித்தவருக்கு (Memes Creator) எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதனை (மீம்ஸ்) நல்லறிவை, நல்லெண்ணங்களைப் பகிரப் பாவித்துப் பயன்பெறலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றைத் தயாரிக்க முயல்வோம். பொருள், பண்டம், எண்ணெய், தண்ணீர் என எல்லாம் நாட்டில விலையேறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், எவரது உழைப்புக்கான வருவாயும் அதிகரிக்காமையால் மக்கள் துன்பப்படுவதைக் காணமுடிகிறது. இதனை வெளிப்படுத்த வடிவேலு ஆச்சரியப்படும் படத்தில் முயன்றுள்ளேன்.
எடுத்துக்காட்டாக வேறொன்றைத் தயாரிக்க முயல்வோம். வடிவேலு தலையில கைவைக்கிற அளவுக்கு என்னதான் குடிமுழுகிப் போச்சு? அந்தப் படத்தை வைச்சு, உழைச்சு வருவாயை மனைவிக்கு வழங்காவிட்டால், வரும் கேட்டை வெளிப்படுத்த முயன்றுள்ளேன்.
இவ்வாறு படத்திற்கு ஏற்ற கருத்து அல்லது கருத்துக்கு ஏற்ற படம் பொறுக்கி நீங்களும் 'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' தயாரிக்கக் பழகலாம். நகைச்சுவையாக நல்ல தகவலைப் பகிரக் 'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' சிறந்த ஊடகமாகும். ஒரு படைப்புக்கு (மீம்ஸ்) 5000 - 25000 உரூபா வரை வேண்ட முயலலாம். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து
வணக்கம் வலையுறவுகளே! மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.
-
வணக்கம் வலையுறவுகளே! மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.
-
நாங்களும் நகைச்சுவை எழுதலாமா? என்று தயங்க வேண்டாம். ஓர் உண்மையைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ எழுதிப் பாருங்க. பின் அதனை மீள மீள வாச...
-
காதலி: தீநுண்மி (கொரோனா) போனாலும் கூட, முகக்கவசத்தை விடமாட்டியளே! காதலன்: உன்னைத் தவிரப் பிறர் என்னை அடையாளம் காணாமல் இருக்கத் தான். காதலி:...
























