வியாழன், 4 நவம்பர், 2021

நீங்களும் நகைச்சுவை எழுதலாம்

நாங்களும் நகைச்சுவை எழுதலாமா? என்று தயங்க வேண்டாம். ஓர் உண்மையைக் கொஞ்சம்  கூட்டியோ குறைத்தோ மாற்றியோ எழுதிப் பாருங்க. பின் அதனை மீள மீள வாசித்துப் பாருங்க. நகைச்சுவை வந்தமையும்.

எடுத்துக்காட்டு:-

'உந்துருளி (Motorbike) ஓடும் யாழ்பாவாணன் அடிக்கடி விழுவாரே!'

'உந்துருளியோ உயரம், யாழ்பாவாணனோ கட்டை'

'காலெட்டாமல் விழுவார் தானே!'

இவ்வாறு, நீங்களும் முயன்று பாருங்கள்.

செந்திலுக்கு ஊசி போட்ட நர்ஸ் 'ஊசி போட்ட கையை நல்லாத் தடவி விடு' என்று சொல்லியிருக்கிறார். அதாவது, செந்திலின்  கையைத் தடவுவதற்குப் பதிலாக நர்ஸின் கையைத் தடவியதே 'நகைச்சுவை' எனலாம். இவ்வாறு, நீங்களும் முயன்று பாருங்கள்.


செந்தில் 'நீங்க எப்படி மனைவியோட மகிழ்ச்சியாக இருக்கிறியள்' என்று கவுண்டமணியிடம் கேட்க 'இரண்டு முழம் மல்லிகைப் பூவும்  கால் கிலோ அல்வாவும் கொடுப்பேன்' என்றிருக்கிறார். அதைக் கேட்ட செந்தில், அதனைத் தன் மனைவிக்கு வேண்டிக்கொடுத்து மகிழ்ச்சியடைந்து இருக்கலாம். ஆனால், கவுண்டமணியின் மனைவிக்கு வேண்டிக் கொடுக்கப் போய் செந்தில் கவுண்டமணியிடம் மாட்டிக்கொள்வதும் 'நகைச்சுவை' தான். இவ்வாறு, நீங்களும் முயன்று பாருங்கள்.

உங்களாலும்  'நகைச்சுவை' எழுத  முடியும். சிந்தித்தால் சிரிக்க வரக்கூடியதாக எழுதுவதே  'நகைச்சுவை' எனலாம். இவ்வாறு, நீங்களும் முயன்று பாருங்கள்.

7 கருத்துகள்:

  1. எழுத ஊக்குவிக்கும் உங்களை பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. கவிதை கதை கட்டுரை என்று பலர் வரும் நேரத்தில் நீங்கள் மாறுபடுகிறீர்கள். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு