செவ்வாய், 7 டிசம்பர், 2021

எழுத்தும் உணர்வு வெளிப்படுத்தும் படமும்

'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) என்றால் என்ன?' என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஏனென்றால்,  'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' என்பது ஒரு மின் ஊடக இலக்கியப் படைப்பாகவும் பேசப்படுகிறது.

எழுத்தும் (கருத்தும்) உணர்வு வெளிப்படுத்தும் படமும் இணைந்த கருத்துப் பட வெளியீடு என்று தான்  'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' என்பதனைச் சொல்ல முடியும். மாற்றாரை நோகடிக்காமல் (தாக்காமல்) நல்ல செய்தியைப் பகிரச் சிறந்த ஊடகம் எனலாம். அதாவது, நகைச்சுவையாக (கேலியும் கிண்டலுமாக) நல்ல அறிவைச் சுருங்கச் சொல்லிப் பகிரலாம். 

சிலரைப் பற்றிய கமுக்கத் தகவல் (கிசுகிசு), சில பொய்த் தகவல் (வதந்தி) போன்றனவும் இவ்வாறு பகிரலாம்.. நேரடியாக இதன் மூலம் பாதிக்கப்பட்டவர், இதனைத் தயாரித்தவருக்கு (Memes Creator) எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதனை (மீம்ஸ்) நல்லறிவை, நல்லெண்ணங்களைப் பகிரப் பாவித்துப் பயன்பெறலாம்.

எடுத்துக்காட்டாக ஒன்றைத் தயாரிக்க முயல்வோம். பொருள், பண்டம், எண்ணெய், தண்ணீர் என எல்லாம் நாட்டில விலையேறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், எவரது உழைப்புக்கான வருவாயும் அதிகரிக்காமையால் மக்கள் துன்பப்படுவதைக் காணமுடிகிறது. இதனை வெளிப்படுத்த வடிவேலு ஆச்சரியப்படும் படத்தில் முயன்றுள்ளேன்.

எடுத்துக்காட்டாக வேறொன்றைத் தயாரிக்க முயல்வோம். வடிவேலு தலையில கைவைக்கிற அளவுக்கு என்னதான் குடிமுழுகிப் போச்சு? அந்தப் படத்தை வைச்சு, உழைச்சு வருவாயை மனைவிக்கு வழங்காவிட்டால், வரும் கேட்டை வெளிப்படுத்த  முயன்றுள்ளேன். 

இவ்வாறு படத்திற்கு ஏற்ற கருத்து அல்லது கருத்துக்கு ஏற்ற படம் பொறுக்கி நீங்களும் 'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' தயாரிக்கக் பழகலாம். நகைச்சுவையாக நல்ல தகவலைப் பகிரக்  'காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)' சிறந்த ஊடகமாகும். ஒரு படைப்புக்கு (மீம்ஸ்) 5000 - 25000 உரூபா வரை வேண்ட முயலலாம். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.2 கருத்துகள்: