புதன், 22 டிசம்பர், 2021

சொல்ல வந்ததை ஆவது துணிவாய்ச் சொல்லுங்கோவேன்.

நம்ம சூழலில் நாங்க படிக்க நிறைய இருக்கு, கொஞ்சம் படித்தால் முன்னேற இடமுண்டு. வாங்க கொஞ்சம் கொஞ்சமாய் படிக்கலாம்.

முகத்தார்: இந்தப் பதின்ம அகவைக் கோளாறில, உந்தப் பொடிபெட்டையள் கதைச்சுத் திரிஞ்சுபோட்டு ஆளுக்காள் வேற தோணியில ஏறுதுகள் கண்டியளோ...

முகத்தார்: காதல் மயக்கத்தில அவரவர் கதைக்கேக்க தங்கட வீட்டு நிலைமைகளை உளறிப்போடுவினம். திருமணம் என்றதும் ஊர்திகள் (கார், மோட்டா் சைக்கிள்), மாடி வீடு, கோடி உரூபா கிடைக்கிற தோணியில ஏறினம் போல.....


காதலி: கேட்பதெல்லாம் தருவதாக விருப்பு ஏற்றிப்போட்டு, எப்ப தாலி கட்டுவாய் என்றதும் கொடுப்பனவு (சீதனம், ஆதனம், பொன், பொருள், பணம்) தாவென்று வெறுப்பு ஏற்றுகிறியே!

காதலன்: வீட்டில...   அம்மா... தான்...

காதலி: அதென்ன அம்மா என்றிழுக்கிறியள்.....  சொல்ல வந்ததை ஆவது துணிவாய்ச் சொல்லுங்கோவேன்.

காதலன்: நாலு பெட்டைக் குட்டியள் இருக்கு, ஒரு பெட்டைக் கொடுப்பனவை வேண்டித் தந்திட்டு யாரையும் கட்டென்று தான் அம்மா விடாப்பிடியாக இருக்கிறா!



ராமு: எரிபொருளெல்லாம் இரவிரவாய் விலையேற்றும் வேலையைச் செய்கிறாங்க. விடிய விடிய வேலைக்குப் போறவைக்குத் தான் திண்டாட்டம்.

சோமு: உதுக்குத் தான் எரிபொருளைப் பாவிக்காத ஊர்திகளில வேலைக்குப் போகச் சொல்கிறேன். அதுக்குத் தான் இறக்கை கட்டிப் பறக்கலாம் என்றெண்ணுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

 வணக்கம் வலையுறவுகளே!  மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.