அடிக்கடி பரவும் செய்தி இவை தான்!
சனி, 26 பிப்ரவரி, 2022
செய்திகளில் காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)
சனி, 1 ஜனவரி, 2022
2022 வந்தாச்சு, என்ன தான் நடக்குமோ?
வெறும் புத்தாண்டு வாழ்த்துகள், வேலைக்கு ஆகாதாம். சிறப்பாக ஏதும் வழங்கி வாழ்த்துங்கோ!
உலகெங்கும் வாழும் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இணையத்தில் மூழ்கினால் மீளவும் முடியுமா?
இணையத்தில் பல விளையாட்டுகள் இருக்கலாம். ஒருவரைப் பற்றிப் புகழும் தகவலை வெளிப்படுத்தும் விளையாட்டும் இருக்காம். அதன் மாதிரியைக் கீழே பார்க்கவும். இவற்றைப் பரப்பினாலும் எவரும் நம்புவதற்கு இல்லை.
இவ்வாறான காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) ஊடாகப் பல உண்மைகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. நம்மாளுங்க தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புதன், 22 டிசம்பர், 2021
இணையம் வந்ந பிறகு எத்தனை மாற்றங்கள்
வலையொளியைப் (யூரியூப்பைப்) பார்த்து மனைவியின் மகப்பேற்றைக் கண்காணித்த கணவரைக் காவற்றுறை பிடித்துச் சிறையில் அடைத்ததாம்.
வலையொளியைப் (யூரியூப்பைப்) பார்த்துப் பள்ளிக்கூட மாணவியின் வயிறு பெருத்தது. கருக்கலைப்புச் செய்த மருத்துவமனைக்கு மூடுவிழா(சீல் வைப்பு).
இவ்வாறு பரவும் செய்திகளுக்குப் பின்னே, 'இணையம் வந்ந பிறகு எத்தனை மாற்றங்கள்' என்று பேசப்படுகிறது. இணையம் வழி பரவும் கேடு விளைவிப்பனவற்றை இணையத்தில் இருந்து அகற்ற அறிஞர்கள் முயலவேண்டும்.
எல்லாவற்றுக்கும் வேண்டிய மதியுரை இணையத்தில இருக்கென்று நேரடியாக ஒரு மதியுரைஞரை (ஆலோசகரை) நாடாமல் தன்னிச்சையாக முடிவேடுப்பது பயனற்றது. மேலுள்ள காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) பற்றியும் சிந்திப்போம். நம்ம சூழலில் நாலு ஆள்களைக் கேட்டறிந்து நல்வழி செல்வதே பயன்தரும்.
சின்னஞ் சிறிசுகள் காதல், திருமணம் என்பவற்றைச் சிந்திக்க முன், நாளைக்கு எப்படித் தின்று குடிப்பது பற்றிச் சிந்தித்தால் தெருவில பிச்சை எடுக்காமல் வாழ முயலலாம். அதனை உணர்த்தவே மேலுள்ள காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) விளக்குவதாக நம்புகிறேன்.
சொல்ல வந்ததை ஆவது துணிவாய்ச் சொல்லுங்கோவேன்.
நம்ம சூழலில் நாங்க படிக்க நிறைய இருக்கு, கொஞ்சம் படித்தால் முன்னேற இடமுண்டு. வாங்க கொஞ்சம் கொஞ்சமாய் படிக்கலாம்.
முகத்தார்: இந்தப் பதின்ம அகவைக் கோளாறில, உந்தப் பொடிபெட்டையள் கதைச்சுத் திரிஞ்சுபோட்டு ஆளுக்காள் வேற தோணியில ஏறுதுகள் கண்டியளோ...
முகத்தார்: காதல் மயக்கத்தில அவரவர் கதைக்கேக்க தங்கட வீட்டு நிலைமைகளை உளறிப்போடுவினம். திருமணம் என்றதும் ஊர்திகள் (கார், மோட்டா் சைக்கிள்), மாடி வீடு, கோடி உரூபா கிடைக்கிற தோணியில ஏறினம் போல.....
வியாழன், 16 டிசம்பர், 2021
புத்தாண்டு எப்பவாம் பிறக்கிறது - நாய்களும் கேட்கிறது
2020 இல புத்தாண்டுப் பலன் சண் ரீவில சொல்லியும் நடக்கேல்ல... தீநுண்மி (கொரோனா) வந்து தடுத்திட்டுது, 2021 இல ஒமிக்கிரான் வந்து நிற்கிறது, 2022 இல யானிமோயுநி என்றேதும் வந்து எனது வெள்ளி திசையில அள்ளிக்கொடுக்காமல் பண்ணுமோ?
குயிலு: என்னடா மயிலு! உங்க வீட்டு நாயோட ஊடகவியலாளர் சந்திப்பு நடந்ததாம். உங்க வீட்டு நாய் என்ன பேசிச்சு?
மயிலு: அடியே குயிலு! நம்ம காதல் கதையைச் சொல்லிச்சு! களவாக நாங்க எத்தனை தடவை பின்வீட்டு வேலிக்க கதைத்தோம் என்று சொல்லிச்சு!
குயிலு: கருங்கண்ணிக் கருவாடு தின்னப் போட்டிட்டு, நாங்க கதைத்ததையும் நன்றியை மறந்து சொல்லிட்டுதே!
மயிலு: நம்ம நாய் நன்றி மறக்காது. விரைவாய்த் தாலி கட்டினால், பத்து மாதத்தில இந்தக் கருவாட்டை உனக்குக் கரையல் வைத்துத் தருவினம் என்று நினைத்து சொல்லியிருக்கும்.
குடிப்போரும் சாவோரும் மலிஞ்சு போச்சு!
'அடேய்! யாழ்பாவாணா! மீம்ஸ் போட்டுத் தற்கொலை செய்யப் போறவையைத் தடுக்கேலாது. அவர்களது சிக்கலுக்குத் தீர்வு வழங்கினால் தற்கொலை செய்யப் போறவையைத் தடுக்கலாம்' என்போர் நம்மைச் சூழ நிறையவே உள்ளனர்.
மூக்குமுட்டக் குடிப்பதற்கே மூன்று கிலோ மீற்றர் மூவுருளியில் சுத்துறாங்களே!
அரசு குடியை ஊக்குவிக்கையில், மூவுருளியில் குடிப்போரை எப்படித் தடுப்பினம்?
வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து
வணக்கம் வலையுறவுகளே! மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.
-
வணக்கம் வலையுறவுகளே! மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.
-
நாங்களும் நகைச்சுவை எழுதலாமா? என்று தயங்க வேண்டாம். ஓர் உண்மையைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ எழுதிப் பாருங்க. பின் அதனை மீள மீள வாச...
-
காதலி: தீநுண்மி (கொரோனா) போனாலும் கூட, முகக்கவசத்தை விடமாட்டியளே! காதலன்: உன்னைத் தவிரப் பிறர் என்னை அடையாளம் காணாமல் இருக்கத் தான். காதலி:...


















